Tuesday, March 6, 2018

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆரம்பக்கல்வி மாணவர்களின் 'கல்விக் கண்காட்சி' நாளை

SHARE
( க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தரம் ஒன்று முதல் நான்கு வரையிலான ஆரம்பக்கல்வி மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'கல்விக் கண்காட்சி' இன்று புதன்கிழமை(7.3.2018) காலை 8.00 மணியளவில் கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஆரம்பக்கல்வி மாணவர்களின் தொழிநுட்ப திறன்களை ஊக்குவித்து சவால்மிக்க உலகிற்கு தயார்படுத்தல் எனும் தொனிப்பொருளில் அதிபர் விமல்ராஜ் அவர்களின் ஆலோசனையிலும்இவழிகாட்டல்களுடனும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம்,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன், ஆகியோர்களும்இசிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பப்பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன், ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி.எஸ்.பூபாலசிங்கம்இஆகியோர்கள் கலந்துகொண்டு கல்விக்கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இதன்போது 1000 மேற்பட்ட கண்காட்சிகள் மாணவர்களின் நன்மை கருதி வைக்கப்படவுள்ளது.30 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியை பார்வையிடவுள்ளதாக ஆரம்ப பிரிவுக்கான உப-அதிபர் எஸ்.சதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 comments: