Sunday, March 4, 2018

குருக்கள்மடம் சமூக மேம்பாட்டு மையத்தின் இவ்வாண்டுக்கான விருதளிப்பு விழா - படங்கள்

SHARE
(வரதராஜ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தில் கல்வி, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்பு, சமூகசேவை போன்றவற்றில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து விருதளிக்கும் நிகழ்வு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோவில் சமூக மேம்பாட்டு மையத் தலைவர் கே.ஞானரெத்தினம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 04ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது. 


இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் கலந்து கொண்டு சாதனை படைத்தமாணவர்களை கௌரவித்ததுடன், ஆத்மீக அதிதியாக இராமகிருஸ்ண மிசன் சுவாமி பிரபு பிறேமானந்தா மகராஜ் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.

மேலும் இந் நிகழ்வில், நிதியமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் எம்.கோபாலரெட்ணம், பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், பதில் நீதவானும் சட்டத் தரணியுமான கே.பேரின்பராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய நிபுணர் வீ. விவேகானந்தராஜா, கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.திருக்கணேஸ், தேசகீர்த்தி ம.திருநாவுக்கரசு ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயங்களில் கடந்த ஆண்டில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களும் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.தராதர சா.தரம், உயர்தரம் போன்றவற்றில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களும், இளம் கண்டுபிடிப்பாளர் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் இங்கு அதிதிகளால் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டனர். 









SHARE

Author: verified_user

0 comments: