Saturday, March 3, 2018

யாத்திரைக்குச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கிப் பலி

SHARE
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலை யாத்திரைக்காக குழுவினருடன் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.


நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில் பகுதியில் இன்று காலை குறித்த இளைஞன் 12 பேர் கொண்ட  நண்பர்களுடன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனும் குளிக்க சென்றுள்ளார்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

எனினும் குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வத்தளை மாபோல பகுதியில் வசிக்கும் 19 வயதான சுதுவா தேவஹே துஷாந்த பாசித்த என்பவரே உயிரிழந்தவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைக்காக சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 comments: