Sunday, March 4, 2018

சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை : சிக்கினார் சந்தேக நபர் கைது.!

SHARE
சிலாபம் - இரணவில சிறுவன் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

10 வயதான சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.


சிலாபம் - இரணவில, சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய பாடசாலை மாணவன் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை பொன்சேகா எனும் சந்தேக நபர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாயாறு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி காணாமல் போன இந்த சிறுவனின் சடலம் நிர்வாணமாக இரணவில காட்டுப் பகுதியில் 27 ஆம் திகதி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 comments: