Thursday, March 1, 2018

சிரியா படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

SHARE

(வரதராஜ்)


சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்கா முன்பாக கண்டன போராட்டம் ஒன் நினை  வியாழக்கிழமை 01ஆம் திகதி பிற்பகல் 04 மணியளவில் நடாத்தினர்.


அப்பாவி மக்களை படுகொலை செய்ய வேண்டாம், மக்கள் வாழும் பகுதிகளில் குண்டுத்தாக்குதல் நடத்த வேண்டாம், பொதுமக்களை பாதுகாக்க  யுத்தத்தை உடன் நிறுத்தவும், யுத்தத்தின் வலி கொடுகையானது எனவே அப்பாவி மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து வௌியிட்டனர்.

சிரியா கௌடாவில் நடைபெற்று வரும் போரில், ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் அதிகமாக அப்பாவி குழந்தைகளே கொல்லப்பட்டு வருகின்றனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட, காயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வைரலகி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இக் கண்டன போராட்டத்தில் கலைஞர்கள் ,  எழுத்தாளர்கள்  பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டனர்





SHARE

Author: verified_user

0 comments: