Friday, March 9, 2018

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 81 பேர் கைது

SHARE
கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் சம்பவங்களை வழி நடத்திய 10 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலும் சட்டத்தை மீறிய 71 பேர் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று காலை திகன மற்றும் பூஜாப்பிட்டிய பகுதிகளில் அவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

இவர்கள் 10 பேரும் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.





மேலும், இந்த அமைதியின்மைக்கு பிரதான காரணமாக அமைந்தவர் விதான பத்திரணகே அமித் ஜீவன் விரசிங்க என்பவர் என்ற தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வௌிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரும் எதிர்வரும் சனிக்கிழமை (10) கண்டி சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யத் தீர்மானித்துள்ளனர்.




SHARE

Author: verified_user

0 comments: