Thursday, March 8, 2018

அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்!

SHARE
இலங்கையில் பேரினவாத இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கலவரம் இன்று உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து உடனடியாக ஒற்றுமைப் பட்டு வெளியேறினார்கள் என்ற செய்தி உலகுக்கு பரந்து செல்ல வேண்டும்.
எனவே அதற்காக உடனடியாக நீங்கள் அனைவரும் நாளை இதனை ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.


என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:.

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த திரடி நடவடிக்கையால் உலக அமைப்பின் நிதிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு சிறுபான்மை முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும் மதஷ்தலங்கள் மீதான அத்துமீறல்களும் கண்டிக்கப்பட்டு சரியான விசாரணை மேற்கொள்ளப்படும். இதற்காக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் தயாராக வேண்டும்..?

பாராளுமன்ரத்தினுள் சிரித்துக் கொண்டு சக்கப்பணிய அமர்வதில் எந்தப் பிரயோசனமும் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. மாறாக உங்கள் நடவடிக்கை உங்களை வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு பெரும் நின்மதியாக இருக்க வேண்டும் என்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப் பணிகள் மைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 comments: