Thursday, February 15, 2018

பழமை வாய்ந்த வெடிபொருள் மீட்பு

SHARE
திருகோணமலை பொது வைத்திய சாலையில் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக குழி தோண்டிக் கொண்டிருந்த போது, பழமை வாய்ந்த வெடிபொருள் ஒன்று, வியாழக்கிழமை  (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.



பெக்கோ இயந்திரம் மூலம் தோண்டிக் கொண்டிருந்த போதே, இவ் வெடிபொருள் தென்பட்டு மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிபொருள் குறித்து தொல்பொருள் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த துறைமுகப் பொலிஸார், குறித்த பகுதியைத் தோண்டுவதை நிறுத்தி வைக்குமாறும் கோரியுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 comments: