Wednesday, February 21, 2018

500 கிலோ பெண்ணின் ஆசையை நிறைவேற்றுவாரா ஹிரித்திக் ரோஷன்?

SHARE

எகிப்து நாட்டை சேர்ந்த எமான் அகமது என்ற 500 கிலோ பெண் பற்றி சமீபத்தில் செய்தி படித்திருப்பீர்கள். தற்போது எடை குறைப்பி சிகிச்சைக்காக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவரின் சிகிச்சைக்காக 1 கோடி தேவை என்ற நிலையில், நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தாயார் 10 லட்சம் ருபாய் கொடுத்து உதவியுள்ளார்.

"நான் எழுந்து நடக்க ஆரம்பித்தால் நடிகர் ஹிரித்திக் ரோஷனுடன் டான்ஸ் ஆட வேண்டும்" என எமான் கூறியதாக அவரின் சகோதரி கூறியுள்ளார்.

அதை பற்றி கேள்விப்பட்ட ஹிரித்திக், "நான் இந்தியா வந்தவுடன் அவரை நேரில் சென்று பார்ப்பேன். என்னுடன் ஆட வேண்டும் என்ற அவருடைய ஆசையை நிறைவேற்ற காத்துக்கொண்டிருக்கிறேன். அதற்குமுன் தற்போது அதிக உடல்எடைக்கு எதிராக அவரின் இந்த போராட்டத்திற்கு இயன்றவரை உதவி செய்வோம்" என தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 comments: