Wednesday, February 21, 2018

மாணவியை வன்புணர்ந்த அதிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை : நீதிபதி இளஞ்செழியன்

SHARE
பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.



அதிபர் ஆசிரியர்களுக்கு பாடமாக அமையவேண்டும்

வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இந்தக் குற்றவாளிக்கு வழங்கப்படும் தீர்ப்பு அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடமாக அமையவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக்காட்டினார்.

யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசலை ஒன்றில் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் தரம் 4இல் கல்வி கற்ற 9 வயது மாணவி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பாடசாலை அதிபரே தன்னை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று மாணவி தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் பாதிக்கப்பட்ட மாணவி நீதிமன்றின் உத்தரவில் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

SHARE

Author: verified_user

0 comments: