Saturday, January 20, 2018

யாழ்.மாவட்­டத்தில் 4,68476 வாக்­கா­ளர்கள் வாக்களிக்க தகுதி

SHARE
உள்­ளூ­ராட்சி மன்றத்  தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தைச் சேர்ந்த 4 இலட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளனர் என்று யாழ்.மாவட்ட தேர்தல் திணைக்­கள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்.மாவட்­டத்தில் யாழ்.மாந­கர சபை மற்றும் மூன்று நகர சபைகள், 13 பிர­தேச சபைகள் உட்­பட 17 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் 2017 ஆம் ஆண்­டுக்­கான தேர்வு இடாப்­புக்கு அமைய 468476 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிக்க தகு­தி­பெற்­றுள்­ளனர். யாழ்.மாந­கர சபைக்கு 56182 வாக்­கா­ளர்­களும், வல்­வெட்­டித்­துறை நகர சபைக்கு  6055 வாக்­கா­ளர்­களும், பருத்­தித்­துறை நகர சபைக்கு 7864 வாக்­கா­ளர்­களும், சாவகச்­சேரி நகர சபைக்கு 12490 வாக்­கா­ளர்­களும் தகுதி பெற்­றுள்­ளனர்.


மேலும் காரை­நகர் பிர­தேச சபைக்கு 8170 வாக்­கா­ளர்­களும், ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபைக்கு 7219 வாக்­கா­ளர்­களும், நெடுந்­தீவு பிர­தேச சபைக்கு 3174 வாக்­க­ாளர்­களும், வேலணைப் பிர­தேச சபைக்கு, 12763 வாக்­கா­ளர்­களும், வலி.மேற்குப் பிர­தேச சபைக்கு 34292 வாக்­கா­ளர்­களும், வலி.வடக்கு பிர­தேச சபைக்கு 60278 வாக்­கா­ளர்­களும், வலி.தென்­மேற்கு பிர­தேச சபைக்கு  37053 வாக்­கா­ளர்­களும், வலி.தெற்கு பிர­தேச சபைக்­கு 37086 வாக்­கா­ளர்­களும், வலி.கிழக்கு பிர­தேச சபைக்கு 35047 வாக்­கா­ளர்­களும், பருத்­தித்­துறை பிர­தேச சபைக்கு 29394 வாக்­கா­ளர்­களும், சாவ­கச்­சேரி பிர­தேச சபைக்கு 41 732 வாக்காளர்களும், நல்லூர் பிரதேச சபைக்கு 27100 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 comments: