Monday, January 22, 2018

இன்று பதுளையில் கண்டன ஆர்ப்பாட்டம்

SHARE
பதுளை தமிழ் மகளிர் கல்லூரி அதிபரின் விடயத்தை முன்னிலைப்படுத்தி ஊவா மாகாணத்தில் தமிழ் மக்களின் கௌர வத்தை இழிவுபடுத்தி விட்டதாக தெரிவித்துள்ள ஊவா கல்வி அபிவிருத்தி மன்றம், இவ்விடயத்துடன் தொடர்புபட்ட முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பதுளை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்  பேரணியையும் நடத்தவுள்ளதாக  தெரிவித்துள்ளது.


இதனை ஊவா மாகாண கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் ஆசிரியர் சமூகத்தினர் வர்த்தக பிரமுகர்கள், நலன்விரும்பிகள்,பெற்றோர்  மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக  மன்றம் அறிவித்துள்ளது.

பாடசாலை வாளாகத்திலிருந்து கண்டன பேரணி ஆரம்பமாகி ஊவாமாகாண சபைவரை சென்று அங்கு எதிப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

SHARE

Author: verified_user

0 comments: