Ad 728x90

Saturday, March 10, 2018

தென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!!!

தென் மாகாண சபை உறுப்பினரையும்,மனைவியையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!!!

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை எதிர் வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Friday, March 9, 2018

குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட குண்டுகளுடன் தொடர்புடையவரென தேடப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
வயற் பகுதியில் இருந்து  கைக்குண்டுகள் இரண்டு மீட்பு

வயற் பகுதியில் இருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் இருந்து இன்று (09) காலை கைக்குண்டுகள் இரண்டை (09) மீட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 81 பேர் கைது

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 81 பேர் கைது

கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் சம்பவங்களை வழி நடத்திய 10 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலும் சட்டத்தை மீறிய 71 பேர் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பப்புவா நியூ கினியாவில் 7.1 ரிச்டரில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 7.1 ரிச்டரில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thursday, March 8, 2018

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம், ஒருவரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு அளுநரின் நேரடி தலையீட்டு அவசியம்

அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு அளுநரின் நேரடி தலையீட்டு அவசியம்

அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நேரடியாகத் தலையிட்டு, அந்த மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டுமென, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு இந்து மகளிர் மன்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு இந்து மகளிர் மன்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று  மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினால் எற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் மன்ற மண்டபத்தில் அவ்மன்றத்தின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்ணம் தலைமையில் இடம் பெற்றது.
கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு   - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு

ஓமத் திராவகம் அருந்தக் கொடுத்த இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு - உடற் கூறாய்வு பரிசோதனைக்கு சடலம் அனுப்பி வைப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திராவகம் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது பற்றிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து  வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்!

அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து வெளியேறினார்கள் என்ற செய்தி ​வௌிவர வேண்டும்!

இலங்கையில் பேரினவாத இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கலவரம் இன்று உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து உடனடியாக ஒற்றுமைப் பட்டு வெளியேறினார்கள் என்ற செய்தி உலகுக்கு பரந்து செல்ல வேண்டும்.
எனவே அதற்காக உடனடியாக நீங்கள் அனைவரும் நாளை இதனை ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

Wednesday, March 7, 2018

முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்! -  அமைச்சர்  ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்! - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை

எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை

இந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

மேலும், அதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை. சிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.

ஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும். தெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.

முஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளைஞன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. மகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம். இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா? எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா? என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் குறிப்பிட்டார்.




கண்டிக்கு மூன்று பொலிஸ் குழுக்கள்

கண்டிக்கு மூன்று பொலிஸ் குழுக்கள்

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் மூன்று பொலிஸ் குழுக்கள் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் மூன்று பொலிஸ்மா அதிபர்களும் மூன்று பொலிஸ் அத்தியட்சகர்களும் இடம்பெற்றுள்ளதுடன் இவர்கள் இந்த பணியை வழிநடத்துவார்கள் என்று பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரே இரவில் அதிக உயிரிழப்பை சந்தித்த கிழக்கு கெளத்தா மக்கள்

ஒரே இரவில் அதிக உயிரிழப்பை சந்தித்த கிழக்கு கெளத்தா மக்கள்

சிரியாவின் கிழக்கு கெளத்தாவில் சிக்கியுள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தாக்குதல் உக்கிரமடைந்ததை அடுத்து பாதி வழியில் திரும்பிச் சென்றுள்ளன. அரச படையின் போர் விமானங்கள் அந்த பிராந்தியத்தின் மீது குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியதை அடுத்து குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப் : முடக்கியது கண்டி கலவரம் - facebook whatsapp

முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப் : முடக்கியது கண்டி கலவரம் - facebook whatsapp

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காத்தான்குடியில் வெடிகுண்டுகள் மீட்பு - ISIS Sri lanka எனவும் எழுதப்பட்டுள்ளது!

காத்தான்குடியில் வெடிகுண்டுகள் மீட்பு - ISIS Sri lanka எனவும் எழுதப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் துண்டிக்கபட்ட நிலையில் தலை மீட்பு!!

கொழும்பில் துண்டிக்கபட்ட நிலையில் தலை மீட்பு!!

கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையில் இன்று காலை 8 மணியளவில் நபர் ஒருவரின் தலை கறுப்பு நிற பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் வாழைத்தோட்ட பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

Tuesday, March 6, 2018

முகமாலைப் பகுதிக்கு ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி விஜயம்

முகமாலைப் பகுதிக்கு ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி விஜயம்

 நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐநாவின்  சிறப்புப் பிரதிநிதி  மிரேந் அல்குஷேன் அவர்கள்   கிளிநொச்சி முகமாலை கண்ணிவெடி அகற்றும்   பிரதேசங்களை இன்று பார்வையிட்டார்.